search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டண கொள்ளை"

    • பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளை தொடர்ந்து நேற்று காந்தி ெஜயந்தியையொட்டி 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.
    • எங்கு இறங்கினாலும் பெங்களூரு - எர்ணாகுளத்திற்கு வசூலிக்கப்படும் முழு கட்டணத்தை ஆம்னி பஸ் நிறுவனங்கள் வசூலித்ததாக பயணிகளிடம் குற்றம் சாட்டி உள்ளனர்.

    சேலம்:

    பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளை தொடர்ந்து நேற்று காந்தி ெஜயந்தியையொட்டி 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி செல்பவர்கள், பணியின் காரணமாக வெளியூரில் தங்கியிருந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

    தொடர் விடுமுறை

    குறிப்பாக சென்னை, பெங்களூரு, கோவை உள்பட பல்வேறு ஊர்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரிவோர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்தனர். அங்கு பொழுதை உற்சாகமாக கழித்த அ வர்கள் நேற்றுடன் விடுமுறை முடிந்ததையடுத்து அவரவர் பணியிடங்களுக்கு மீண்டும் செல்ல தொடங்கினர். இதையொட்டி நேற்று மதியம் முதலே சேலம் புதிய பஸ் நிலையத்தில் ஏராளமான பயணிகள் திரண்டனர்.

    குறிப்பாக பெங்களூரு, சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, கடலூர், புதுச்சேரி, மதுரை, தஞ்சை ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் நேற்று மதியம் முதலே பயணிகள் கூட்டம் அலை மோதியது. மாணவ-மாணவிகள் அதிக அளவில் பஸ் நிலையத்திற்கு வந்ததால் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இைதயொட்டி சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கும் 150-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனாலும் கோவை, சென்னை, பெங்களூரு, திருப்பூர், வேலூர் ஆகிய ஊர்களுக்கு செல்லு ம் பஸ்கள் பயணிகள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. இந்த கூட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் வரும் பஸ்களில் எல்லாம் பயணிகள் முண்டியடித்த படி ஏறி சென்றனர்.

    கூடுதல் கட்டணம் வசூல்

    இேத போல சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூர், கோவை, திருச்சி மதுரை, நெல்லை, நாகர்கோவிலுக்கும், பெங்களூருவில் இருந்து ெதன் மாவட்டங்களுக்கும் அதிக அளவில் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு சேலம், மதுரை, நாகர்கோவில் வழியாக இயக்கப்பட்ட பஸ்களில் நெல்லைக்கு அதிக பட்சமாக 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. வழக்கமான கட்டணம் 700 ரூபாய் ஆகும்.

    இதில் பெங்களூரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் வழியில் எங்கு இறங்கினாலும் பெங்களூரு- எர்ணாகுளத்திற்கு வசூலிக்கப்படும் முழு கட்டணத்தை ஆம்னி பஸ் நிறுவனங்கள் வசூலித்ததாக பயணிகளிடம் குற்றம் சாட்டி உள்ளனர். இதனால் பயணிகள் கடும் தவிப்புக்குள்ளாகினர். மேலும் இந்த கட்டண கொள்ளை இனி வரும் பண்டிகை காலங்களிலும் தொடரும் என்பதால் இதனை தடுக்க போக்குவரத்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகளிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

    ×